Saturday 18 April 2015

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?


ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியேஅடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.
இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.
மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.
நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!
இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,
தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:
1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.
2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.
தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.
மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் 

Friday 17 April 2015

எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா ?


"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியானா பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.