Saturday 31 May 2014

எண்ணமே முதல் குரு ! ! !

ஒருவர் கண்ணாடி முன் நிற்கும் போது ஒரு உண்மையை உணர முடியும் எப்படி என்றால் தங்கள் வலது கை கண்ணாடி முன் காட்டினால் பிறர் பார்க்கையில் இடது கையாக தெரியும்

அது போல தான் வாழ்கை நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு மட்டுமே அதை பிறரிடம் கேட்டால் தப்பு வேண்டாம் என்று சொல்வார்கள்
உங்களுக்கு சரி என்று பட்டதை செய்து வாழ்வில் வெற்றி அடையுங்கள் உங்கள் எண்ணமே முதல் குரு அப்படி பட்ட என்னைத்தை பக்குவ படுத்தி வெற்றி பெறுங்கள்

Friday 30 May 2014

கேட்க்கும் முறை

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
÷""மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''
÷மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:
÷""மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''

÷மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
÷அவனது தந்தை கூறினார்:
÷""மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''
÷அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:
÷""மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''
÷கடைசியாக மனைவி கேட்டாள்:
÷""நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''
÷மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை: ÷""என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.

Tuesday 27 May 2014

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்?

 தீபாவளி மட்டுமல்ல. எல்லா நாளுமே விசேஷமான நாள்தான். அதனால் எல்லா நாட்களுமே தலைக்கு குளித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், இவ்வுடலில் தலை மிக முக்கியமான ஒரு பாகம். எனவே தலையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது
எப்படி குளிக்கவேண்டும்?
             கண்டிப்பாக தலையில் இருந்து தான் குளிக்கவேண்டும். சிலர் முதலில் காலில் தண்ணிர் உறுவர்கள், அப்பொழுது என்னவாகும். காலில் உள்ள வெப்பம் சற்று மேலே ஏறும், கொஞ்சம் கொஞ்சமாக கிழ் இருந்து மேலாக தண்ணிர் உற்றும் போது உடலுடைய வெப்பம் தலையை தாக்கும் வாய்ப்பு சற்று அதிகம். 

சாதாரணமாக ஒருவர் குளித்துவிட்டு வந்த உடன் அந்த பாத்ரூம் வெட்பமாக இருப்பதை நம்மால் உணரமுடியும். இப்பொழுது நாம் உடலில் உள்ள வெட்பம் தலைக்கு சென்றால் எப்படி இருக்கும். 
ஸ்நானம் என்றாலே அது தலை முதல் கால்விரல் வரை என்றுதான் இருக்க வேண்டும்.


பிறந்த குழந்தைக்கு தலை உச்சியில் ஒரு மென்மையான இடம் இருக்கும், இதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குழந்தையை குளிப்பாட்டும்போது அவ்விடத்தில் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். ஏனெனில், இவ்விடத்தில் கொஞ்சம் எண்ணெய் வைத்தாலே உடல் உஷ்ணம் குறைவதை நீங்கள் உணரலாம். இதையே தொண்டைக் குழியிலோ அல்லது தொப்புள் பகுதியிலோ கூட வைக்கலாம்.

குறிப்பாக வெயில் காலத்தில் எண்ணெய் ஸ்நானம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். மற்ற நேரங்களில் சாதாரணமாக குளிக்கும்போதும் தலை முதல் கால் வரை குளிப்பது மிக அவசியம்.

Thursday 22 May 2014

மனிதனும்---- தெய்வமும்....



ஸ்ரீமத்பாகவதத்தில் கூறப்பட்டுள்ளதை கூருகிறேன்.
மனிதர்களாகிய நாம் தாங்கமுடியாத துர்நாற்றம்,மற்றும் அழுகிய தசைகள்,நரகல்கள்,சாக்கடை போன்றவற்றை கண்டால் நாம் அங்க நிற்போமா அந்த இடத்தில் காலைகூட வைக்கமாட்டோம்.இல்லையாஆனால் இறைவன் நம் மனதில் இத்தனை அசிங்கங்ளோடு ஒப்பிடும். காமம்,குரோதம்,ஆணவம்,கொலை,பொறாமை,பழி, இன்னும் எண்ணற்ற இழி செயல்களின் மத்தியில் உறைகிறான் ஏன் தெரியுமா தன் சொத்தாகிய இவன் என்றாவது நம்மை உணர்ந்து நம்மிடம் திரும்பிவந்துவிடமாட்டான. என்று யுகயுகமகா எதிபார்த்து காத்து இருக்கிறார். ஆனால் நாம் அதனை மறந்து அரிதிலும் அரிதான மானிட ஜென்மம் அடைந்து நல்லது கெட்டது பிரித்தறியும் ஆறாம் அறிவை பெற்றும் .இன்னும் இறைவனை நாம் அடைய முடிவதில்லை. இந்த இழிசெயல்கள் எத்தனை செய்தலும் அதனை மன்னித்து அரவணைத்து காத்து மீண்டும் ஜென்மம் தந்து தன்னை உணரவைக்கபார்க்கிறார் இப்பேர்ப்பட்ட இறைவனின் கருணையை என்னவென்று சொல்வது இறைவா......என்றும் கல்யாணகுணத்தோடு இருக்கும் எம்பெருமாள். எல்லாம் முதலில் நிர்ணயம் செயப்பட்டது என்றால் இறைவனின் காத்திருப்பு எதற்கு..? 6---ம் அறிவை மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்தது எதற்க்கு..? தன் சாயலில் படைத்த இறைவன் இந்த அறிவின் மூலம் மனிதன் தன்னை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கு இறைவனிடம் தூய பக்தியை செலுத்துவது ஒன்றே வழி .....

Monday 19 May 2014

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.

Sunday 18 May 2014

என்றைக்கும் தங்கம் தங்கம்தான்!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஆஸ்திரேலியாவில் ஓர் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் வறண்டஓடையில் காலடி வைத்துச் செல்கிறார் ஓர் ஆய்வுப்பயணி. உச்சிவெயில் அவருடைய முதுகை நன்கு பதம்பார்க்க, வியர்வைத் துளிகள்மெல்ல கசிந்து, புழுதிபடிந்த சட்டையை நனைக்கின்றன. சிறிதும்தளராமல், சாப்பாட்டு தட்டின் அளவிலான ஒரு கருவியில்பொருத்தப்பட்டுள்ள நீண்ட உலோகக் கம்பியைப் பிடித்தவாறேநடக்கிறார். அப்படியே அந்த நிலத்தின் மீது அதிநவீன ‘மெட்டல்டிடெக்டரை’ ஆட்டிக்கொண்டு வருகிறார். பாறைமிக்க மண்ணில்மூன்றடி ஆழத்திற்குள் அதன் காந்தப்புலம் ஊடுருவிச் செல்கிறது.காதில் பொருத்தியிருந்த ‘ஹெட்போனுக்கு’ மெட்டல் டிடெக்டரிலிருந்துபலத்த விசில் சத்தத்தில் சமிக்கை வந்துகொண்டே இருக்கிறது.
இப்போது, அந்தப் பலத்த விசில் சத்தம் ‘டிக் டிக் டிக்’ என்றமெல்லோசையாக மாறுகிறது, அவரது நாடித்துடிப்போ திடீரெனஅதிகரிக்கிறது—ஏதோ உலோகம் மண்ணுக்குள் புதைந்திருப்பதைசுட்டிக்காட்டும் சமிக்கையேதான் இது. அப்படியே மண்டியிட்டு, சிறியகுத்துக்கோடரியால் மளமளவென கெட்டியான மண்ணைத்தோண்டியெடுக்கிறார். அப்போது, துருப்பிடித்த ஆணியோ பழங்காலநாணயமோ அவரது கண்ணில் தட்டுப்படுகிறது. ஆனால் இன்னும்ஆழமாகத் தோண்டத் தோண்ட அவரது விழிகள் கூர்ந்துஆராய்கின்றன—ஏதாவது தங்கம் கண்ணில் தட்டுப்படாதா என்று!
தேடல் தொடர்கிறது
தங்கத்தைக் கண்டுபிடிக்கும் முறைகள் மாறியிருக்கலாம், ஆனால்,தகதகவென மின்னும் இந்த மஞ்சள் உலோகத்தை தொன்றுதொட்டேமனிதர் ஆவலாய் நாடித் தேடியிருக்கின்றனர். சொல்லப்போனால்,உலக தங்க ஆய்வுக் குழுவின்படி, கடந்த 6,000 ஆண்டுகளாக 1,25,000டன்னுக்கும் அதிகமான தங்கம் பூமியிலிருந்து வெட்டிஎடுக்கப்பட்டுள்ளது.* எகிப்து, ஓப்பீர், தென் அமெரிக்கா போன்றபண்டைய நாகரிகங்கள் தங்கத்திற்குப் பேர்பெற்று விளங்கின.என்றாலும், இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட எல்லா தங்கத்திலும் 90சதவீதத்திற்கும் அதிகமான தங்கம் கடந்த 150 ஆண்டுகளில்தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.—1 இராஜாக்கள் 9:28.
1848-ல், கலிபோர்னியாவிலுள்ள அமெரிக்க ஆற்றங்கரையில்அமைந்துள்ள “சட்டர்ஸ் மில்” என்ற மரத் தொழிற்சாலையில் தங்கம்கண்டுபிடிக்கப்பட்டபோது, தங்கத்தைத் தோண்டும் மோகம்தீவிரமானது. அதற்குப் பிறகு, தங்கத்தைத் தேடி வெள்ளம் போல்மக்கள் திரண்டுவர ஆரம்பித்தார்கள். அங்கு வந்த அனைவரும்கலிபோர்னியா மண்ணில் புதைந்துள்ள பொக்கிஷத்தைக்கண்டுபிடிக்கும் ஆசைக் கனவில் மிதந்தார்கள். ஆனால் அநேகருடையஆசைக் கனவு பலிக்கவில்லை, என்றாலும் சிலருக்கு “அதிர்ஷ்டம்”அடித்தது. இங்கு தோண்டியெடுக்கப்பட்ட விலையுயர்ந்த தங்கத்தின்அளவை கேட்டால் நீங்கள் மலைத்துப்போவீர்கள். ரோம சாம்ராஜ்யம்அரசாண்ட காலப்பகுதி முழுவதும் உலகெங்கிலும்வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் பத்து டன் என்றால், 1851-ல் மட்டுமேகலிபோர்னியா தங்க வயலிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின்எடையோ 77 டன்!
கிட்டத்தட்ட அதேசமயத்தில், உலகின் மற்றொரு பாகத்திலும்,அதாவது புதிய குடியேற்றப் பகுதியான ஆஸ்திரேலியாவிலும், தங்கம்கண்டுபிடிக்கப்பட்டது. கலிபோர்னியா தங்க வயலில் ஆய்வுசெய்வதில் அதிக அனுபவம் பெற்றிருந்த எட்வர்டு ஹார்கிரேவ்ஸ்ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்; நியூ சௌத் வேல்ஸிலுள்ள பாத்ரஸ்ட்என்ற சிறிய பட்டணத்திற்கு அருகிலுள்ள ஓர் ஆற்றில் தங்கம்இருப்பதை கண்டுபிடித்தார். 1851-ல், விக்டோரியா மாநிலத்தைச்சேர்ந்த பல்லாரட்டிலும் பென்டிகோவிலும் பெருமளவில்தாதுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைப் பற்றிய செய்திபரவியபோது, தங்கத்தை நாடித் தேடுவோர் அங்கு படையெடுத்துவந்தார்கள். வந்திருந்த சிலர் சுரங்கம் வெட்டும் தொழிலில்கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் பலரோ விவசாயிகளாகஅல்லது அலுவலர்களாக இருந்தார்கள், அவர்களுடைய கைகள்சுரங்கத் தொழில் புரிவோருடைய குத்துக்கோடரியை ஒருபோதும்தொட்டதில்லை. தங்கச் சுரங்கம் இருக்கும் ஒரு பட்டணத்தில் நிகழ்ந்தகாட்சியை வர்ணிக்கையில், அந்நாளைய செய்தித்தாள் ஒன்றுஇவ்வாறு கூறியது: “பாத்ரஸ்ட் மீண்டும் பைத்தியமாகிவிட்டது. தங்கப்பித்து அதிதீவிரத்துடன் மீண்டும் வந்துள்ளது. ஆண்கள் ஒன்றுகூடிவருகிறார்கள், ஒருவரையொருவர் மடத்தனமாகப்பார்த்துக்கொள்கிறார்கள், பிறகு ஏதேதோ பிதற்றிக்கொள்கிறார்கள்,அடுத்து என்ன நடக்குமோ என ஆச்சரியத்தோடு இருக்கிறார்கள்.”
அடுத்து என்ன நடந்தது? ஜனத்தொகை வெடிப்பு. 1851-க்குப் பின்வந்தபத்தாண்டில், ஆஸ்திரேலியாவில் வசித்த மக்களின் எண்ணிக்கைஇரட்டிப்பாகியது; உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலிருந்தும்ஆய்வாளர்கள் பலர் நம்பிக்கையோடு அங்கு வந்து குவிந்தார்கள்.ஆஸ்திரேலியா எங்கும் பல்வேறு அளவுகளில் தங்கம்கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சுரங்கத்தில் குறைந்துபோனால்,மற்றொன்று தோண்டப்பட்டது. 1856-ம் ஆண்டில் மட்டுமே,ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் 95 டன் தங்கம் தோண்டியெடுத்தார்கள்.பிறகு, 1893-ல், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கால்கூர்லி-பௌல்டர் என்ற இடத்திற்கு அருகே அமைந்திருந்த நிலப்பகுதியில்தோண்ட ஆரம்பித்தார்கள். அந்நாள் முதல், 1,300-க்கும் அதிகமான டன்தங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது; அந்த இடம்தான் “2.5 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் உலகிலேயே தங்க தாதுக்கள் செழிப்பாககாணப்படும் இடம்” என விவரிக்கப்படுகிறது. அந்த இடத்திலிருந்துஇன்றும் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது; இப்போது இதுதான்உலகிலேயே மிக ஆழமாக தோண்டப்பட்டிருக்கும் திறந்தவெளி தங்கச்சுரங்கம்—சுமார் இரண்டு கிலோமீட்டர் அகலத்திற்கும் சுமார் மூன்றுகிலோமீட்டர் நீளத்திற்கும் 400 மீட்டருக்கும் அதிக ஆழத்திற்கும்மனிதன் வெட்டிய பள்ளத்தாக்கு!
இன்று உலகிலேயே அதிகமாய் தங்கம் வெட்டியெடுக்கப்படும்நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது ஆஸ்திரேலியா.இத்தொழில் 60,000 ஆட்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது. சுமார்300 டன் தங்கத்தை, அதாவது (ஆஸ்திரேலியா டாலரில்500 கோடிடாலர் (17,000 கோடி ரூபாய்மதிப்புள்ள தங்கத்தை, ஒவ்வொருஆண்டும் வெட்டி எடுக்கிறது. தங்கம் தோண்டியெடுப்பதில் ஐக்கியமாகாணங்கள் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.ஆனால், நூறு ஆண்டுகளுக்கு மேலாக, உலகிலேயே மிக அதிகமானதங்கம் வெட்டியெடுப்பதில் முன்னணி வகிக்கும் நாடு தென்ஆப்பிரிக்கா. இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் சுமார் 40சதவீதம் இந்த நாட்டிலிருந்தே வந்திருக்கிறது. உலகெங்கும்ஒவ்வொரு ஆண்டும் 2,000 டன்னுக்கும் அதிகமான தங்கம்வெட்டியெடுக்கப்படுகிறது. விலையேறப் பெற்ற இத்தனை டன்தங்கமும் என்ன செய்யப்படுகிறது?
செல்வமும் அழகும் இணைகிறது
இன்றும் நாணயங்கள் தயாரிக்க ஓரளவு தங்கம்பயன்படுத்தப்படுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்மின்ட் இப்பொழுது உலகிலுள்ள நாணய தயாரிப்பாளர்களில் முக்கியஒன்றாக விளங்குகிறது. இந்த நாணயங்கள் புழக்கத்தில் இல்லைஎன்றாலும், சேகரிப்பவர்கள் அவற்றை சேமித்து வைக்கிறார்கள்.அதோடு, இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் சுமார்கால்வாசி தங்கம் பாளங்களாக மாற்றப்பட்டு, வங்கிப் பெட்டகங்களில்அடைத்து வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஐக்கியமாகாணங்கள்தான் மிக அதிகமான தங்கப் பாளங்களை வங்கிப்பெட்டகங்களில் நிரப்பி வைத்திருக்கிறது.
தற்பொழுது, ஒவ்வொரு ஆண்டும் தோண்டியெடுக்கப்படும் தங்கத்தில்சுமார் 80 சதவீதம்—சுமார் 1,600 டன்—தங்க ஆபரணங்களாகவடிவமைக்கப்படுகிறது. உலகிலேயே ஐக்கிய மாகாண வங்கிகளில்மிக அதிகமான தங்கம் இருக்கலாம், ஆனால் இதில் தங்கஆபரணங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், உலகிலேயேஇந்தியாவில்தான் அதிக அளவில் தங்கம் இருக்கிறதெனசொல்லலாம். மதிப்புமிக்கதாகவும் அழகாகவும் இருப்பதோடு, இந்தமென்மையான உலோகம் பற்பல வழிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்றபண்புகளைப் பெற்றிருக்கிறது.
ஒரு பண்டைய உலோகத்தின் நவீன பயன்கள்
தங்கம் துருப்பிடிக்காத உலோகம் என்பதை பண்டைய எகிப்திலிருந்தபார்வோன்கள் அறிந்திருக்கலாம், அதனால்தான்இறந்துபோனவர்களுக்கு முகமூடியாக அதை பயன்படுத்தினார்கள்.டூடன்காமன் என்ற பார்வோனின் கல்லறையை ஆயிரக்கணக்கானஆண்டுகளுக்குப்பின் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது,அந்த இளம் அரசனுடைய தங்க முகமூடி எவ்வித கறையுமின்றிமஞ்சள் நிறத்தில் தகதகவென மின்னியது. இது, தங்கம் அழியாததுஎன்பதை நிரூபிக்கிறது.
பிற உலோகங்களை அரித்தழிக்கும் நீரும் காற்றும் தங்கத்தைப்பாதிப்பதில்லை, அதனால் தங்கம் அதன் பொலிவைஇழந்துவிடுவதில்லை. துருப்பிடிக்காத திறனையும் மின்சாரத்தைக்கடத்தும் ஒப்பற்ற திறனையும் ஒருங்கே பெற்றிருப்பதால்,எலக்ட்ரானிக் கருவிகளில் பயன்படுத்துவதற்குச் சிறந்த சாதனமாகஅது விளங்குகிறது. டிவி-கள், விசிஆர்-கள், செல்போன்கள், சுமார் 5கோடி கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கு ஒவ்வொருஆண்டும் சுமார் 200 டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. அதோடு,உயர்தரமான ‘காம்பேக்ட் டிஸ்க்’குகளில் ஒரு மெல்லிய அடுக்காகதங்கம் பயன்படுத்தப்படுகிறது, இது நீண்ட காலத்திற்கு‘டேட்டா’க்களை அழியாமல் பாதுகாத்து வைக்க உதவுகிறது.
மெல்லிய தங்கத் தகடுகளுக்கு அசாதாரணமான பண்புகள் சிலஉண்டு. அந்த உலோகம் ஒளியுடன் செயல்புரிவதைச் சிந்தித்துப்பாருங்கள். மிகமிக மெல்லிய தகடுகளாக அதை அடிக்கும்போது,தங்கம் ஒளி ஊடுருவும் சாதனமாக மாறுகிறது. இந்தளவுமெல்லியதாக இருக்கும்போது, பச்சை ஒளி அலைகள் கடப்பதற்கு அதுஅனுமதிக்கிறது, ஆனால் புறச்சிகப்பு ஒளியை பிரதிபலிக்கிறது. தங்கதகடிடப்பட்ட ஜன்னல்கள் ஒளியை உள் வாங்கிக்கொண்டு வெப்பத்தைவெளியே கக்கிவிடுகின்றன. இதனால், நவீன விமானத்தினுடையமாலுமியின் ஜன்னல்கள் தங்கத்தால் தகடிடப்படுகின்றன; அதைப்போலத்தான் புதிய ஆபீஸ் கட்டடங்கள் பலவற்றின் ஜன்னல்களும்செய்யப்படுகின்றன. அதோடு, விண்வெளிக் கலங்களின் சிலபாகங்கள், அதாவது எளிதில் பாதிக்கப்படும் பாகங்கள், ஒளிஊடுருவாத கெட்டியான தங்கத் தகடுகளால் மூடப்படுகின்றன.பலமான கதிர்வீச்சிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் அவற்றை இவைநன்றாக பாதுகாக்கின்றன.
பேக்டீரியாக்களாலும் தங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே,சேதமடைந்த அல்லது சொத்தையான பற்களை சரிப்படுத்துவதற்குஅல்லது மாற்றுவதற்கு பல் வைத்தியர்கள் இதைபயன்படுத்துகிறார்கள். பாதிப்படைந்த நரம்புகளை அல்லது இரத்தநாளங்களை வலுப்படுத்துவதற்கு உடலுக்குள் செலுத்திபொருத்தப்படும் சிறிய ஒயர் டியூப்கள் போன்றவற்றில் தங்கம்பயன்படுத்தப்படுகிறது.
தங்கத்தின் பல்வகைப் பயனையும் மதிப்பையும் அழகையும்சிந்தித்துப் பார்க்கையில், கவர்ச்சியான இந்த உலோகத்தைஆய்வாளர்கள் தொடர்ந்து தேடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

தங்கம் அதிக அடர்த்தியாக இருப்பதால், வெறும் 37 கன சதுர சென்டிமீட்டர் அளவுடைய தங்கக்கட்டி சுமார் 1 டன் எடையுள்ளதாக இருக்கும்.

தங்கம் எங்கே கிடைக்கிறது?
▪ பாறைகள்: எல்லா எரிமலைப் பாறைகளிலும் மிகச் சிறிய அளவுகளில் தங்கம் இருக்கிறது. கம்பெனிகள் சுரங்கம் தோண்டி, பாறைகளை நொறுக்கி வேதியியல் முறையில் தாதுப்பொருளிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்குத் தகுதியான அளவில் பூமியிலுள்ள சில பாறைகளில் தங்கம் நிறைந்து காணப்படுகிறது. உயர்தரமான தாதுவில் ஒரு டன் மண்ணுக்கு 30 கிராம் தங்கம் மாத்திரமே இருக்கிறது.
▪ கனிமப்பாறைகள்: படிக அடுக்குகளுக்கு இடையே தகடு அல்லது கம்பி வடிவில் எப்போதாவது தங்கம் காணப்படுகிறது. இது கனிமப்பாறை தங்கம் (reef gold) என அழைக்கப்படுகிறது.
▪ ஆறுகள்: சூரியன், மழை, காற்று ஆகியவற்றின் காரணமாக, தங்கம் நிறைந்த கனிமப்பாறைகள் சிதைந்து கழிகளிலும் ஆறுகளிலும் சிறுசிறு துகள்களாக குவிகின்றன. இந்த முறையில் கிடைக்கும் தங்கம் வண்டல் மண் தங்கம் (alluvial gold) எனப்படுகிறது.
▪ பூமியின் பரப்பில்: ஒழுங்கற்ற வடிவில் கட்டித் தங்கம் பூமியின் மேற்பரப்பில் அங்குமிங்கும் கட்டிகளாக உருவாவது போல் தெரிகிறது. சிலசமயங்களில், இந்தக் கட்டிகள் பிரமாண்டமான அளவுகளில் காணப்படலாம். ஆஸ்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய தங்கக் கட்டி த வெல்கம் ஸ்ட்ரேன்ஜர் என அழைக்கப்பட்டது; அதன் எடை சுமார் 70 கிலோகிராம்! அது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் 1869-ல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவே, மிகப் பெரிய தங்கக் கட்டிகளின் வீடாக திகழ்கிறது; இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 25 மிகப் பெரிய தங்கக் கட்டிகளில் 23 இங்குதான் கிடைத்துள்ளது. இன்று வைரத்தைப் போன்ற தரமான கற்கள் கிடைத்தாலும், தீக்குச்சியின் முனை அளவிலான மிகச் சிறிய தங்கக் கட்டிகளைக்கூட காண்பது அரிது.

மெட்டல் டிடெக்டர் எப்படி செயல்படுகிறது?
  மெட்டல் டிடெக்டரிலுள்ள முக்கிய பாகங்களே பொதுவாக இரண்டு ‘காயில்’கள்தான். இந்தக் காயில்களில் ஒன்றின் வழியாக மின்சாரம் பாயும்போது, காந்தப்புலம் உருவாகிறது. மெட்டல் டிடெக்டரை தங்கத் துண்டு போன்ற உலோகப்பொருள் ஒன்றின்மேல் கொண்டுவரும்போது, அந்தப் பொருளில் வலிமையற்ற காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. மெட்டல் டிடெக்டரிலுள்ள இரண்டாவது காயில் இந்த வலிமையற்ற காந்தப்புலத்தை கண்டுபிடித்து, ஒளி, அளவுமானி, அல்லது சத்தத்தின் வாயிலாக ஆப்பரேட்டருக்கு சிக்னல் தருகிறது.


1800-களில் தங்கம் அதிகமாக தோண்டி எடுக்கப்படத் தொடங்கியது:
1. சட்டர்ஸ் மில், கலிபோர்னியா, அ.ஐ.மா.
2. பென்டிகோ கழி, விக்டோரியா, ஆஸ்திரேலியா
3. கோல்டன் பாய்ன்ட், பல்லாரட், விக்டோரியா, ஆஸ்திரேலியா

தங்கத்தின் நவீனகால பயன்கள்
உயர்தரமான ‘காம்பேக்ட் டிஸ்க்’குகளில் மெல்லிய அடுக்காக தங்கம்
விண்வெளிக் கலங்களில் தங்க தகடுகள்
மைக்ரோசிப்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது
தங்க தகடிடப்பட்ட ஒயர்கள் மின்சாரத்தைக் கடத்தும் சிறந்த திறனுடையவை