Tuesday 27 May 2014

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்?

 தீபாவளி மட்டுமல்ல. எல்லா நாளுமே விசேஷமான நாள்தான். அதனால் எல்லா நாட்களுமே தலைக்கு குளித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், இவ்வுடலில் தலை மிக முக்கியமான ஒரு பாகம். எனவே தலையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது
எப்படி குளிக்கவேண்டும்?
             கண்டிப்பாக தலையில் இருந்து தான் குளிக்கவேண்டும். சிலர் முதலில் காலில் தண்ணிர் உறுவர்கள், அப்பொழுது என்னவாகும். காலில் உள்ள வெப்பம் சற்று மேலே ஏறும், கொஞ்சம் கொஞ்சமாக கிழ் இருந்து மேலாக தண்ணிர் உற்றும் போது உடலுடைய வெப்பம் தலையை தாக்கும் வாய்ப்பு சற்று அதிகம். 

சாதாரணமாக ஒருவர் குளித்துவிட்டு வந்த உடன் அந்த பாத்ரூம் வெட்பமாக இருப்பதை நம்மால் உணரமுடியும். இப்பொழுது நாம் உடலில் உள்ள வெட்பம் தலைக்கு சென்றால் எப்படி இருக்கும். 
ஸ்நானம் என்றாலே அது தலை முதல் கால்விரல் வரை என்றுதான் இருக்க வேண்டும்.


பிறந்த குழந்தைக்கு தலை உச்சியில் ஒரு மென்மையான இடம் இருக்கும், இதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குழந்தையை குளிப்பாட்டும்போது அவ்விடத்தில் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் அதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். ஏனெனில், இவ்விடத்தில் கொஞ்சம் எண்ணெய் வைத்தாலே உடல் உஷ்ணம் குறைவதை நீங்கள் உணரலாம். இதையே தொண்டைக் குழியிலோ அல்லது தொப்புள் பகுதியிலோ கூட வைக்கலாம்.

குறிப்பாக வெயில் காலத்தில் எண்ணெய் ஸ்நானம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். மற்ற நேரங்களில் சாதாரணமாக குளிக்கும்போதும் தலை முதல் கால் வரை குளிப்பது மிக அவசியம்.

No comments:

Post a Comment