Thursday 22 May 2014

மனிதனும்---- தெய்வமும்....



ஸ்ரீமத்பாகவதத்தில் கூறப்பட்டுள்ளதை கூருகிறேன்.
மனிதர்களாகிய நாம் தாங்கமுடியாத துர்நாற்றம்,மற்றும் அழுகிய தசைகள்,நரகல்கள்,சாக்கடை போன்றவற்றை கண்டால் நாம் அங்க நிற்போமா அந்த இடத்தில் காலைகூட வைக்கமாட்டோம்.இல்லையாஆனால் இறைவன் நம் மனதில் இத்தனை அசிங்கங்ளோடு ஒப்பிடும். காமம்,குரோதம்,ஆணவம்,கொலை,பொறாமை,பழி, இன்னும் எண்ணற்ற இழி செயல்களின் மத்தியில் உறைகிறான் ஏன் தெரியுமா தன் சொத்தாகிய இவன் என்றாவது நம்மை உணர்ந்து நம்மிடம் திரும்பிவந்துவிடமாட்டான. என்று யுகயுகமகா எதிபார்த்து காத்து இருக்கிறார். ஆனால் நாம் அதனை மறந்து அரிதிலும் அரிதான மானிட ஜென்மம் அடைந்து நல்லது கெட்டது பிரித்தறியும் ஆறாம் அறிவை பெற்றும் .இன்னும் இறைவனை நாம் அடைய முடிவதில்லை. இந்த இழிசெயல்கள் எத்தனை செய்தலும் அதனை மன்னித்து அரவணைத்து காத்து மீண்டும் ஜென்மம் தந்து தன்னை உணரவைக்கபார்க்கிறார் இப்பேர்ப்பட்ட இறைவனின் கருணையை என்னவென்று சொல்வது இறைவா......என்றும் கல்யாணகுணத்தோடு இருக்கும் எம்பெருமாள். எல்லாம் முதலில் நிர்ணயம் செயப்பட்டது என்றால் இறைவனின் காத்திருப்பு எதற்கு..? 6---ம் அறிவை மனிதனுக்கு மட்டும் இறைவன் கொடுத்தது எதற்க்கு..? தன் சாயலில் படைத்த இறைவன் இந்த அறிவின் மூலம் மனிதன் தன்னை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கு இறைவனிடம் தூய பக்தியை செலுத்துவது ஒன்றே வழி .....

No comments:

Post a Comment