Wednesday 5 November 2014

ஒரு முக ருத்ராட்சம்

அதில் ஏக முகம் எனப்படும் ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்றாகும். அது பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடிய, விலை மதிக்கமுடியாத ஒன்றாகக் கூறப்படுகிறது. சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய தன்மை பெற்றிருப்பது இந்த ஏக முகருத்ராட்சம். 

ஒரு உண்மையான ஏக முக ருத்ராட்சத்தை ஒரு படி அளவுள்ள ஏதாவதொரு தானியத்தின் அடியில் இட்டால், அது தானாகவே மேலே கிளம்பி வரக்கூடிய தன்மை பெற்றதாகும் என்று ஒரு ஆச்சரியமான தகவலை பழைய நூல் ஒன்று தெரிவிக்கிறது. ஒரு முக ருத்ராட்சம் நவக்கிரகங்களில் சூரியனுக்கு உரியது; 

சகலவிதமான பித்ரு தோஷங்களையும் விலக்கி நல்வாழ் வளிக்கும் தன்மை பெற்றது. எல்லா நலன்களையும் தரக்கூடிய இந்த ருத்ராட்சத்திற்கு உரிய மந்திரமானது ஓம் ஹ்ரீம் நம என்பதாகும். சிவ மஹா புராணத்தில் ஒவ்வொரு வகை ருத்ராட்சங்களுக்கும் உரிய பீஜ மந்திரங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment