Sunday 30 August 2015

ரக்ஷா பந்தன்


மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. போர்க்களத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனைப் பார்த்த திரௌபதி என்ற ஒரு பெண், தனது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, கிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணனின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியை தனது உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டார்.
மேலும், திரௌபதியின் பாதுகாப்புக்கும் அவளது வாழ்க்கை நலனுக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதிபூண்டார். ஒருமுறை திரௌபதியை, எதிரிகள் ஆடையைக் களைந்து அவமானப்படுத்த முயன்றபோது கிருஷ்ணன் தக்க சமயத்தில் வந்து திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார்.
திரௌபதி, கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) விழாவாக கொண்டாடப்படுகிறது. ‘ராக்கி’ கயிற்றை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment