Thursday 3 April 2014

ஸ்ரீராம நவமி

ஸ்ரீராம ஜெயம்

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி எனக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். 

அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனு பவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். 

இந்நாளில் ஸ்ரீராமருக்கு கோவில்களில் பட்டாபிஷேகம் நடைபெறும். அன்று, கோவிலுக்கு செல்ல முடியாதபோது, பட்டாபிஷேக இராமர் படத்தை நன்றாகச் சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவைகளால் பொட்டிட்டு, துளசியால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும். 

பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். நைவேத்யமாக, சாதாரணமாகத் தினம் தயார் செய்யும் உணவோடு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் ஆகியவைகளைப் படைக்கலாம். 

அர்ச்சனை முடிந்தபின், நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்குத் தர வேண்டும். ஸ்ரீராமபிரான் விசுவாமித்திரர் பின்னால் இருந்த போதும், காட்டில் வாழ்ந்த போதும், தாகத்திற்கு நீர்மோரும், பானகமும் தேவைப்பட்டதாம். அதன் நினைவாகத்தான் அவையிரண்டும் நைவேத்யமாகப் படைக்கப்படுகின்றது. 

சிலர், பத்து நாட்களுக்கு முன்னரே இராமாயணத்தைப் படிக்க ஆரம்பித்து, ஸ்ரீராம நவமியன்று பட்டாபிஷேகத்துடன் முடித்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்யமாகப் படைப்பார்கள். அவ்வாறு முடியாவிட்டாலும், ஸ்ரீராம நவமியன்று, இராமாயண கதாகாலட்சேபம் கேட்பதோ, சிறிது நேரமாவது இராமாயணம் படிப்பதோ நல்லது. 

காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். 

குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும் நாடியப் பொருட்கள் கைகூடும். இராமாயணத்தை முழுமையாகப் படிக்க முடியாத பட்சத்தில் “ராம்” என்ற இரண்டெழுத்தைஉச்சரித்தால் கூடப் போதும், மேற்கூறிய பலன்களோடு ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும்.

No comments:

Post a Comment