Saturday 5 July 2014

உயிரினிலும் மேலானது கொள்கை!!!


நாகப்பட்டினத்தில் மீனவர் குலத்தில் பிறந்தவர்
அதிபத்த நாயனார்.அன்றாடம் கடலில்
சென்று மீன்
பிடித்து விற்று வழக்கை நடத்தி வந்தார்.மீன்
பிடித்து வந்த பிறகு கிடைத்த மீன்களுள் பெரிய
மீனை "நட்டமாடிய நம்மருக்கு"(நடராஜருக்கு )
என்று கூடி மறுபடியும் கடலில் விட்டு விடுவார்.
ஒரு காலகட்டத்தில் ஒரு மீன் கூட கிடைக்காத
நாட்கள்,வந்தன.அதனால் அதிபத்தர்
பசி பட்டினியால் வாடி உடல்
மெலிந்தார்.பல
நாட்களுக்கு பிறகு ஒரு நாள் வலையில்
ஒரே ஒரு மீன் அகப்பட்டது.அந்த மீன்
பொன் நிறத்துடன் நவமணிகளும்
பொதிக்கபட்டு மிக உயர்ந்த
விலைக்கு விற்கக் கூடியதாக
இருந்தது.அதனை விற்று வரும் பணத்தால்
அவரின் வறுமை முழுவதையும் போக்கிக்
கொள்ளலாம்.
இப்போது அதிபத்தர் முன்னால் தனது நீண்ட
நாள் கொள்கையின் படி முதல்
மீனை கடலில் இறைவனுக்கே அர்ப்பணம்
என்று சொலி விடுவதா அல்லது விற்று தனது வறுமையைப்
போக்கி கொள்வதா என்ற
வினா வந்தது.
தெளிவாக முடிவெடுத்தார் உயிரினும்
சிறந்தது கொள்கை.ஆதலால் கிடைத்த
ஒரே மீனையும் நட்டமடியவரின் (நடராஜர்)
பங்கு என அதைக் கடலில் விட்டு விடுகிறார்.
வசதி படைத்தவர்கள் வயிறு நிரம்பியிருக்கின்ற
நேரத்தில் பூஜை,விரதம் என்பவற்றில் ஈடுபடுவதில்
வியப்பில்லை.இவர்கள் கூட தங்களுடைய
வசதி குறைந்த களத்தில்
இக்கொள்கையை விடாது நிறைவேறுவார்களா
என்பது ஐயத்திற்குரியது.
ஆனால் ,அடியார்களைப்
பொறுத்தமட்டில் நிலைமை முற்றிலும் வேறு.
ஒரு கொள்கையை உயிரை விட
மேலானதாகக் கருதுவார்கள் அதை நிறைவேற்ற
முடியவில்லை என்றால்
உயிரை விடுவார்களே தவிரக்
கொள்கையை விடமாட்டார்கள்.
வறுமையிலும் சிவத் தொண்டு புரிந்த
அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான்
கட்சி தந்து அருளினார்

No comments:

Post a Comment