Friday 13 March 2015

படிகம்

இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல் (Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். இவை பல வண்ணங்களில் கிடைத்தாலும் பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

இந்த இரத்தினம் வெள்ளை நிறத்துடன் கூடியது. இது 7 வண்ணங்களையும் வெளிவிடும் தன்மை கொண்டது. கிரிஸ்டல்கள் பூமிக்கடியில் பல இலட்சக்கணக்கான வருடங்களாகப் படிப்படியாக உருவாகின்றன. தண்ணீர் கெட்டித்தன்மையாக்கப்பட்டு அத்தோடு பூமிக்கடியில் உள்ள (Minerals) தாது உப்புக் களும் சேர்ந்து படிகமாக மாறுகிறது. இவைகளுக்கு (Heart Beat) உயிர்த் துடிப்பும் உண்டு, ஒரு நொடிக்கு 35658 அதிர்வுகளை உடையது. நாம் சொல்பவைகளை உள் வாங்கிக் கொள்ளும் தன்மையும் இவைகளில் காணப்படுகிறது(நல்ல, கெட்ட ). மேலும் இவை உள் வாங்கியவைகளை வெளிவிடும் தன்மையும் கொண்டதாக விளங்குகின்றது. இதை பல வடிவங்களில் அணியலாம். மாலை, தங்கக்காப்பு, மோதிரக்கல், பிரமிடு, பென்சில், படிகப்பந்து  இன்னும் பல வடிவங்களில் இந்த படிக இரத்தினம் உள்ளது.

சூட்டு உடம்பு உடையவர்கள் வெள்ளைப் படிகத்தை இரவு தண்ணீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர சூடு குறையும். உடம்பு வலிக்கு மேல் பூச்சாகவும் ஜபமாலையாகவும் இதைப் பயன்படுத்தலாம். வைரத்திற்குப் பதிலாகவும் இவற்றை உபயோகிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் போடலாம்.

No comments:

Post a Comment