Saturday 14 March 2015

மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ?

வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள்.
வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை;
சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்பு மிக மிக அதிகம்.



நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள்; விசேஷங்களுக்கு மட்டும் தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.
'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும்.

Mango leaves cure for Diarrheoa - Food Habits and Nutrition Guide in Tamil
இவற்றில் மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.

இதை பிளாஸ்டிக் அலங்கார பொருளாக பயன்படுத்தாமல், உண்மையான இலைகளை பயன்படுத்துவதே நல்லது.

வீட்டு வாசலும், மங்களகரமாக இருக்கும்!

No comments:

Post a Comment