Wednesday 19 March 2014

பஞ்சாக்ஷர மந்திரத்தின் பயன்

ஓம் நமச்சிவாயா


நாரத முனிவர் சிவபெருமானிடம் சென்று பஞ்சாக்ஷர மந்திரத்தின் பயனைப் பற்றி கூறுமாறு கேட்டார். அதற்கு சிவபெருமான் அதோ அந்தக் காட்டில் ஒரு புலி இருக்கிறது. அதனிடம் சென்று கேள் என்று கூறினார். அவ்வாறே சென்று கேட்டவுடன் அந்தப் புலி உடனே இறந்துவிட்டது. அதிரச்சி அடைந்த முனிவர், சில நாள் கழித்து மீண்டும் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி, மீண்டும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் பயனைப் பற்றி கூறுமாறு கேட்டார். அதற்கு சிவபெருமான் மீண்டும் அந்தக் காட்டில் ஒரு பசு இருக்கிறது. அதனிடம் சென்று கேள் என்று கூறினார். அவ்வாறே சென்று கேட்டவுடன் அந்தப் பசுவும் உடனே இறந்துவிட்டது.
முனிவர் மீண்டும் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி, இந்தமுறையாவது அவசியம் தெரிவிக்கும்படி கேட்டார். இப்போது சிவபெருமான் காசி மகாராணிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதனிடம் சென்று கேள். என்று கூறினார். அவ்வாறே முனிவர் சென்று கேட்டவுடன், அந்தக் குழந்தை “முனிவரே, நான் யார் தெரியுமா? நான் காட்டில் ஒரு புலியாக இருந்தேன். நீங்கள் என்னிடம் வந்து, ஏதோ ஒரு மந்திரத்தைக் கூறினீர்கள். அதைக் காதால் கேட்ட புண்ணியத்தால் நான் பசுவாகப் பிறந்தேன். நீங்கள் மீண்டும் வந்து, என்னிடம் அந்த மந்திரத்தைக் கூறினீர்கள். அதைக் கேட்டதின் பயனாக இப்போது இளவரசனாகப் பிறந்திருக்கிறேன். இந்தமுறை நீங்கள் மந்திரத்தின் பெயரை மட்டும் கூறினீர்கள். தயவுகூர்ந்து அந்த மந்திரத்தை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டது.
எச்சரிக்கையடைந்த முனிவர் “நான் பிறகு வந்து, நீ பெரியவனாகிய பிறகு, உனக்கு உபதேசம் செய்கிறேன்” என்று கூறிச் சென்றுவிட்டார்.

No comments:

Post a Comment