Monday 24 March 2014

கௌரி சங்கர் ருத்ராக்ஷம்

மந்திரம் - ஓம் கெளரி சங்கராய நமஹ

மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.



இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன.


No comments:

Post a Comment