Saturday 14 June 2014

நான் யார்?

நான் ஒரு தனி சிறப்பு மிக்க மனிதர் என்று நினைத்தல் நான் மிக சிறந்த மனிதனாக தான் இருப்பேன். அம்பானி ஆரம்பக்காலத்தில் இருந்தது தன்னை மிக சிறந்த தொழில் அதிபர் என்றும், தன்னை ஒரு வியாபாரம் காந்தம் என்றுதான் நினைத்தார் அதனால் தான் அவர் மிக சிறந்த ஒரு தொழில் அதிபர் ஆக முடிந்தது.


நம்மில் 97% மக்கள் நினைப்பது நமக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்றுதான் நினைக்கின்றோம்.

நம்மில் எத்தனை பேர் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றோம் மிகவும் குறைவு. நம்மில் 99.6% மக்கள் நினைப்பது யாராவது நமக்கு உதவ மாட்டர்களா.. என்றுதான் நினைக்கிறோம் நாம் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைப்பதில்லை.

நமது எண்ணம் கண்ணாடி போல தான் நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும். நீ அழுதல் அதுவும் அழும்.

உன் எண்ணத்தால் மட்டுமே நீ தனி சிறப்பு மிக்க மனிதனாக முடியும். நீ பணக்காரனாக நினைத்தல் நீ நிச்சயமாக பணக்காரனாக தான் வருவாய், நீ ஒன்றும் இல்லை என்று நினைத்தல் ஒன்றும் இல்லாமல் தான் போவாய்.

நீ நல்லவன் என்று நினைத்தல் அந்த எண்ணம் உன்னை தவறு செய்ய விடாது. நல்லதை நினைத்தல் நல்லதே நடக்கும். எண்ணத்தின் சக்தி மிகவும் உயர்ந்தது.

No comments:

Post a Comment