Sunday 8 June 2014

மோகினி ஏகாதசி

இன்று (9.6.2014) ஏகாதசி . வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி, மோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்ததற்கான பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும் மோகினி ஏகாதசி சகல விதமான பாவங்களையும் அறியாமையையும் நீக்கும். இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அவதார புருஷரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்க, குலகுருவான வசிஷ்டர் விவரித்திருக்கிறார்.
மேலும், முக்கோடி ஏகாதசி என்று அழைக்கப்படும் வைகுண்ட ஏகாதசி அன்று தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை அருளினார் என்று கருதப்படுகிறது.
நாராயணனை வணங்கி நலம் பல பெறுவோமாக !!!
ஓம் நமோ நாராயணாய ||



No comments:

Post a Comment