Monday 9 June 2014

பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

பிரம்மன் என்பவர் உயிரை படைப்பவர் ஆவார்.இந்த பூமியில் இருக்கும் ஒரு உயிரானது படைத்த கடவுளாலே எடுத்துகொள்ளவேண்டும்.அப்படியில்லாமல் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தாலோ,பாதிப்பை ஏற்படுத்தினாலோ,உயிரை எடுத்தாலோ உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்

1.
பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுப வித்து  , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.
பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.
குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.
குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.
வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6 .
சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் 

7.
உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.
வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.
தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.
மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.
தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.
திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.
குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம் 
.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும்.

இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.

பரிகாரம்;
-------------
ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.சிவ பக்தரான ராவணனை கொன்றதால் இந்த தோசம் ஏற்பட்டது.ராமர் வணங்கிய தேவிபட்டிணம் சென்றால் தோசம் விலகும்.ராமேஸ்வரம் சென்று வந்தாலும் தோசம் விலகும்.


இன்னொரு எளிமையான பரிகாரமும் செய்யலாம்.அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கி,சிவனுக்கு மூன்று அகல் விளக்கு ஏற்றி,அர்ச்சனையும்,அபிஷேகம் செய்து வந்தால் சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார்

    தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர்  கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல்அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்

No comments:

Post a Comment